.

ஹைக்கூ


ஹைக்கூ
மழையில் நனைந்தும்
வண்ணம் மாறவில்லை
வண்ணத்துப்பூச்சி !
தீயால் சுட்டபோதும்
வண்ணம் மாறவில்லை
வெண்சங்கு !
தீ க்காயம் பட்டபோதும்
நல்கியது இனிய இசை
புல்லாங்குழல் !
பயணத்தில்
வரிசை மாறவில்லை
எறும்பு !
சுமையை
சுமையாகக் கருதவில்லை
நண்டு !
பசித்தபோதும்
உண்ணவில்லை புல்
புலி !
ஏமாற்றிக் கரந்தபோதும்
பால் தந்தது
பசு !
உழுது உதவியது
உழவனுக்கு
மண் புழு !
அடித்தப்போதும்
குரைத்து உதவியது
நாய் !
வெட்டியப்போதும்
கறியானது
ஆடு !
வலையில் சிக்கியும்
உணவானது
மீன் !
  ஹைக்கூ (சென்றியு )
  ஹைக்கூ ( சென்றியு )
  புகையிலைப் பழக்கம் ஒழிப்போம் !
  உணர்வால் மக்கள் இதயத்தில் என்றும்வாழ்பவரே சிவந்தி ஆதித்தனார் ! கவிஞர் இரா .இரவி !
  ஹைக்கூ !
  மனித விலங்குக்கு மனசாட்சி இருக்குமா ?
  நீதிநாயகம் சந்துரு வாழ்க !
  ஹைக்கூ ! ( சென்ட்ரியு )
  அய்யகோ ! அவசரப்பட்டு விட்டாய் மணி !
 

Copyrights(c) 2010, All rights reserved. Era e ravi.com | Designed by Yellowwin Media